எழுத்தாசிரியர் உரை (ஆத்தியடிப்பிள்ளையார் கோவில் திருவிழாக்கள்)

ஆலயம் என்பது 'ஆ'-ஆன்மா 'லயம்'-லயிக்கும் இடம் எனவும் கோயில் என்னும் போது 'கோ'-இறைவன் 'இல்”-;வாழும் இடம் என்றும் பொருள் கொள்ளப்படும். ஆலயங்கள் ஆகமவிதிக்கேற்ப அமைக்கப்படுவதுடன் அங்கு இடம் பெறும் பூசைகிரிகைகள் விழாக்கள் என்பனபும் ஆகம விதிக்கேற்பவே நிகழ்த்தப்படுகின்றது.இருப்பினும் சில ஆலயங்களில் தொடர்ந்து பின்னற்றப்படும் மரவு முறைகளிற்கு ஏற்ப கிரிகைமுறைகளில் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்படுவது உண்டு.


இந்து தர்மத்தில் பிரபஞ்சசக்தியை பரமாத்மா எனவும் மனிதசக்தியை ஜீவாத்மா எனவூம் கூறப்பட்டுள்ளது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறு அல்ல இரண்டும் வேறுபட்டநிலைகள் பரமாத்மாவின் ஒரு அங்கமான ஜீவாத்மா முயன்றால் பரமாத்மாவோடு தன்னனை ஜக்கியப்படுத்திக் கொள்ளமுடியூம்.ஜீவாத்மா பலஹீனமடையூம் போது தெய்வத்திடமிருந்து சக்தியை( பரமாத்மாவிடமிருந்து சக்தியை) பெற்றுக்கோள்ளவேணடும். இவ் அடிப்படை உள்ளார்ந்ததத்துவத்தின் காரணமாக உருவாக்கப்பட்டதே ஆலயங்கள். ஆலயங்களில் தெய்வவிக்கிரகங்களை மனிதன் தான் பிரதிட்டை செய்கின்றான் பரந்து பட்ட பிரபஞசம் முழுவதும் விலாபித்திருக்கும் தெய்வசக்தியை மந்திர உச்சாடனங்கள் ,பஜனைகள் ,அபிடேக,ஆராதனைகள் மூலம் ஒடுக்கி தெய்வ விக்கிரகங்களில் சக்தியை ஏற்றுகின்றான். அதே போல் தனக்கு துன்பம் நேரும்போது பிரார்த்தனைமுலம் தெய்வத்திடமிருந்து சக்தியை பெற்று தனது துன்பத்தை போக்கிக்கோள்ளுகின்றான்.

எமது மூதாதையரால் ஏற்றியூம் போற்றியூம் தொண்டாற்றப்பட்ட ஆத்தியடிப்பிள்ளையார் ஆலயம் கிட்டத்தட்ட இருநுர்று ஆண்டு பழமையான வரலாற்றைக் கொண்டது வேண்டுவாரின் வினை தீர்த்து வரமருளும் விநாயக்பெருமான் உறையூம் திருக்கோயில் வருடாவருடம் நெறிமுறை தவறாது நித்திய, நைமித்திய பூசைகள் சிறப்புற நடந்த வண்ணமுள்ளது இவ்வாறு ஆலயவிழாக்கள் ஆலய விழாக்கள் ஒழுங்குடன் நடாத்துவிக்கப்படுவதாலே எமது ஆலயம் இன்றும் புகழ்பூத்தவண்ணம் உள்ளது.

ஆத்தியடிப்பிள்ளையார் கோயில் நடாத்தப்படும் பூசைகள் விழாக்கள் பற்றி பலரும் அறிந்திருப்பினும் இங்கு நிகழ்தப்படும் விழாக்கள் பற்றி பிற்காலத்தவர் அறியூம் நோக்குடனும் கிரிகை விளக்கத்தை ஓரளவிற்கேனும் அறிந்திடும் நோக்குடனும் எமது முன்னவர்களால் வெளியிடப்பட்ட கும்பாவிஷேக நுர்ல் ,தருமபரிபாலனசபை நுர்ற்றாண்டுவிழாமலர், மகோற்சவக்குருக்கள்,ஆலயக்குருக்கள் போன்றோரிடம் கேட்டு அறிந்தவை,சைவசித்தாந்த, சைவசமயகிரிகைகள் போன்ற நுர்ல்களில் இருந்தும் சேர்க்கப்பட்ட தகவல்களைக்கொண்டும் இத் தொகுப்பை ஆக்கியூள்ளேன்.


DR சோ.கனகசுந்தரம் B.S.M.S(SL)
ஆத்தியடி,பருத்தித்துறை
(ஆயூள்வேத வைத்தியசாலை)
(நானாட்டான்,மன்னார்)

No comments: